சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை - இன்று முதல் முக்கிய மாற்றங்கள்!
இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களை தெரிந்துக்கொள்வோம்.
முக்கிய மாற்றங்கள்
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலைகளில் மாற்றங்களை செய்கிறன.
அதன்படி செப்டம்பர் 1-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்தது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகும்.
டிஜிட்டல் கேமிங் பிளாட்ஃபாரங்கள், சில வணிகர்கள், மற்றும் அரசாங்க பரிவர்த்தனைகளுக்கு செய்யப்படும் செலவுகளுக்கு ரிவார்டு பாய்ண்ட் வழங்கப்படாது. இதனால், கார்டு வைத்திருப்பவர்களின் பாக்கெட்டில் நேரடி பாதிப்பு ஏற்படும்.
என்னென்ன தெரியுமா?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுப்பதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளது. முன்னதாக இந்த தேதி ஜூன் 30 ஆக இருந்தது, பின்னர் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 30, 2025-லிருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. எனவே நீங்கள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அபராத நோட்டீஸ் வரக்கூடும்.
வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் விதி அமல்படுத்தப்படலாம். இனி பதிவு அஞ்சல் (பதிவு செய்யப்பட்ட இடுகை) தனியாக இல்லாமல், ஸ்பீட் போஸ்ட் (ஸ்பீடு போஸ்ட்) சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பும் பதிவுகள் அனைத்தும் ஸ்பீட் போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.