வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் - குஷியில் பயணிகள்!
வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
வந்தே பாரத்
இந்தியன் ரயில்வே துறையானது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்மூலம், ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை பயணிகள் புக்கிங் செய்யலாம். இந்த அம்சமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இயங்கும் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொருந்தும்.
டிக்கெட் முன்பதிவு
20631 மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல். 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல். 20627 சென்னை எக்மோர் - நாகர்கோவில்.
20628 நாகர்கோயில் - சென்னை எக்மோர். 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு. 20646 மங்களூர் சென்ட்ரல் - மட்கான். 20671 மதுரை - பெங்களூரு. 20677 டாக்டர் MGR சென்னை சென்ட்ரல் - விஜயவாடா.
www.irctc.co.in அல்லது IRCTC Rail Connect மொபைல் அப்ளிகேஷனில் டிக்கெட் பதிவு செய்யலாம். இந்த அம்சம் கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.