தமிழ்நாட்டில் ஓடும் இந்தியாவின் மிக மெதுவான ரயில் - எங்கே தெரியுமா?
இந்தியாவில் தற்போது வந்தே பாரத், தேஜஸ், சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அதிக வேகத்துடன் இனிமையான பயண அனுபவத்தை வழங்குகின்றன.
மேலும், 2030 ஆம் ஆண்டில் மணிக்கு 308 கிமீ வேகத்தில் ஓடும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிக மெதுவாக ஓடும் ரயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீலகிரி மலை ரயில்
தமிழ்நாட்டில் 200 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே ஓடும் நீலகிரி மலை ரயிலே இந்தியாவின் மிக மெதுவாக ஓடும் ரயில் ஆகும்.
இந்த நீலகிரி மலை ரயில் முதலில் 1854 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த சிக்கல்கள் காரணமாக 1891 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1908 ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது.
மணிக்கு 10 - 12 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், மொத்தமுள்ள 46 கிமீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது.
செங்குத்தான மலை சரிவு மற்றும் கூர்மையான வளைவுகள் காரணமாக இந்த ரயில் இவ்வளவு மெதுவான வேகத்தில் செல்கிறது. செங்குத்தான சரிவுகளில் எற rack-and-pinion என்ற அமைப்பை பயன்படுத்துகிறது.
இந்த ரயில் பாதையில், 208 வளைவுகள், 16 சுரங்கபாதைகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. லவ்டேல், வெலிங்டன், ஆடர்லி, குன்னூர் மற்றும் ரன்னிமீட் ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரயில் பயணிக்கிறது.
பழங்கால நீராவி எஞ்சின்கள் இந்த ரயிலின் சிறப்பம்சமாகும். 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இந்த மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.