விருதுநகரில் விஜய பிரபாகர் - வெளியான தேமுதிக வேட்பாளர் பட்டியல்
தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - தேமுதிக கூட்டணி
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து கட்சிக்கு அனுதாப வாக்குகள் வரலாம் என்ற கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதன் காரணமாகவே 5 இடங்களை தேமுதிக பெற்றுள்ளதாக கருத்துக்கள் பேசப்படும் நிலையில், தற்போது கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பட்டியல் வருமாறு,
விருதுநகர் - விஜய பிரபாகரன்
மத்திய சென்னை - பார்த்தசாரதி
திருவள்ளூர் - நல்ல தம்பி
கடலூர் - சிவக்கொழுந்து
தஞ்சாவூர் - சிவநேசன்
வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேருக்கு நேர் ராதிகா சரத்குமார் மற்றும் விஜயபிரபாகரன் போட்டியிடவுள்ளனர்.