கூட்டணிக்கு ரெடி; ஆட்சி அதிகாரத்திலும் பங்கு - விஜய் அறிவிப்பு!
கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், மக்களோடு மக்களாய் களத்தில் நிற்க போகிறோம். தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்குண்டு. பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.
கூட்டணிக்கு அழைப்பு
2026 ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தில் புத்தாண்டு. யார் பெயரையும் இந்த விஜய் நேரடியாக சொல்லாம இருக்கானே என்று நினைப்பீர்கள். அதற்கு காரணம் பயம் அல்ல. அரசியல் நாகரீகம். யாரையும் தாக்குவதற்கு இங்குவரவில்லை.
தவெக தொண்டர்களின் கடுமையான உழைப்பை நம்பி மக்கள் தனிப்பெரும்பான்மை வழங்குவார்கள். யாரையும் தரக்குறைவாக, தகாத வார்த்தைகள் பேச நாங்கள் வரவில்லை.
Decent அரசியல் செய்ய வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திமுகவுக்கு செக் வைக்கும் நகர்வாக பார்க்கப்படுகிறது.