தொண்டர்களால் நிரம்பிய தவெக மாநாடு - நண்பர் விஜய்க்கு.. உதயநிதி ஸ்டாலின் நச்!

Udhayanidhi Stalin Vijay Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Oct 27, 2024 09:54 AM GMT
Report

  தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தும் விஜய்க்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 மாநாடு

விக்கிரவாண்டி வி.சாலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ளது. 85 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு பணிகளை ஒரு மாதத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.

tvk vijay

மேலும் மாநாட்டுக்கான அரங்கில் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ,தமிழன்னை, சேரர், சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

தவெக மாநாடு..விஜய் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசியல் களம்!

தவெக மாநாடு..விஜய் என்ன சொல்லப்போகிறார்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசியல் களம்!

இந்த மாநாட்டில் மாநாட்டுத் திடலுக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ரிமோட் மூலம், 100 அடி உயரத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைக்கவுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசியல்   களத்தில்  எம்ஜிஆர் தொடங்கி, உதயநிதி ஸ்டாலின் வரை திரைத்துறையைச் சேர்ந்தவர்களைத்   வரவேற்றிருக்கிறது.

 உதயநிதி ஸ்டாலின்

இந்த வரிசையில் புதியதாக நடிகர் விஜய் இணைந்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

tvk maanadu

இன்று நடக்கும் தவெக முதல் மாநில மாநாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.