விஜய் அரசியலுக்கு வரட்டும்...ஆனா அதுக்கு முன்னாடி...!! வெற்றிமாறன் சொன்ன விஷயம்!!

Vijay Vetrimaaran Leo
By Karthick Nov 05, 2023 07:30 AM GMT
Report

நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றி விழாவில் சூசகமாக பேசிய அரசியல் கருத்துக்கள் தான் தற்போது பேசும் பொருளாக இருந்து வருகின்றது.

விஜய் பேச்சு

லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், வரும் "2026-இல் காப் முக்கியம் பிகில்" என கூற அது தற்போது வரை தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

vijay-political-moves-vetrimaaran-advice

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

வெற்றிமாறன் கருத்து

அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் மட்டுமல்ல, அனைவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான தகுதி உள்ளது என தெரிவித்தார்.

vijay-political-moves-vetrimaaran-advice

மேலும், நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம் எனக்கூறிய அவர், அதற்கு முன்னதாக கள செயல்பாடுகளில் விஜய் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.