அவர் சினிமா - அவர் பாணி..ஆனால் - விஜய் அரசியல் வருகை - கமல் கருத்து
தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்ட சிறிது காலத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2-ஆம் தேதி கட்சியை துவங்கியது முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், மக்களையும் நேரடியாக சந்திக்க துவங்கி விட்டனர்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் பல கருத்துக்களை பகிர்ந்து வரும் சூழலில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார்.
அது அவர் பாணி..
கட்சியின் 7-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது விஜய்யின் இஷ்டம்.. அவர் செய்யும் சினிமா, அவர் பாணி என்று தெரிவித்து, தான் செய்யும் சினிமா தன்னுடைய பாணி என்றார்.
மேலும் தான் விஜயோடு ஏற்கனவே பேசி இருப்பதாக தெரிவித்த அவர், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரை வரவேற்ற முதல் குரல் தன்னுடையதுதான் என்றும் கூறினார் கமல்ஹாசன்.