விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 24, 2024 10:00 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் அரசியல் மாநாட்டை எங்கு நடத்த உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

vijay tvk

தற்போது கோட் என்னும் படத்தில் நடித்து வரும் நிலையில் இதற்கு அடுத்ததாக ஒரு படம் நடித்த பின் சினிமாவுக்கு ஓய்வளித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

விஜய் கட்சியில் இணைய தயார் - பிரபல நடிகர் அறிவிப்பு

விஜய் கட்சியில் இணைய தயார் - பிரபல நடிகர் அறிவிப்பு

அரசியல் மாநாடு

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது என கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.  

vijay kallakurichi

விரைவில் கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை அரசியல் மாநாடு நடத்தி அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள இடத்தை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்துவதை ராசியாக பார்க்கின்றனர். எனவே விஜய்யும் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்தவே வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் அரசியல் மாநாட்டில் விஜய் என்ன பேச உள்ளார் என்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும் மற்ற கட்சியினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.