விஜய் கட்சியில் இணைய தயார் - பிரபல நடிகர் அறிவிப்பு
விஜய் கட்சி தொடங்கியது குறித்து நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.
ராதாரவி
'கடைசி தோட்டா' என்ற படத்தில் ராதாரவி வனிதா விஜயகுமார் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாராவி, "நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன்.
அரசியல்
அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அதே போல அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அது போல என் நடிப்பு பயணமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன் அவர் என்னை அழைத்தால் நிச்சயம் அவர் கட்சியில் இணைவேன்" என பேசியுள்ளார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
