தவெக அரசியல் மாநாடு - நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்
தவெக அரசியல் மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட உள்ளார்
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சி கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
மாநாடு அறிவிப்பு
இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் காவல் துறையிடம் மனு அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் எழுப்பி பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கிய நிலையில் நேற்று அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலர் ஆனந்த் காவல் துறையிடம் வழங்கினார்.
இந்நிலையில், மாநாடு அனுமதி தொடர்பாக 2 நாளில் பதில் அளிப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளை மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக கட்சி தலைவர் விஜய் காலை 11:17 மணிக்கு அறிவிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.