பார்த்துட்டுதான் இருக்கேன்; விஜய் மனைவி சங்கீதா அப்படித்தான் - மாமியார் ஓபன்டாக்!
விஜய்யின் தாய் ஷோபா கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் - சங்கீதா
விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். படத்திற்கு பின் முழுமையாக களத்தில் இறங்கவுள்ளார்.
குறிப்பாக விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை என்று சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
ஷோபா பேட்டி
"சங்கீதா ரொம்ப நல்ல பெண். முழுக்க முழுக்க ஹவுஸ் வைஃபாக இருக்கிறார். அவர் போல் பிள்ளைகளை வளர்க்கவே முடியாது. அவர்கள் மீது அவ்வளவு பாசத்தை கொட்டுகிறார். அதனை நான் கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அதேபோல் பிள்ளைகளுக்கு ஏதாவது வேண்டுமென்றால் வேலைக்காரர்களை விட்டு கொடுக்க சொல்லமாட்டார். எதுவாக இருந்தாலும் தன் கைகளால் மட்டும்தான் கொடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இரண்டு பேரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்; விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கத்தான் இப்படி பலரும் அவரது குடும்ப விஷயத்தை தோண்டுகிறார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.