அவர் தான் காதலரா? வைரலாகும் சமந்தாவின் காதலர் தின புகைப்படம்
சமந்தா காதலர் தினத்தன்று வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சமந்தா
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழும் காதலர்கள், தங்களுடைய காதல் துணையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதே போல் நடிகை சமந்தாவும் காதலர் தினத்தை ஒரு நபருடன் கொண்டாடியது போல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு ஆணும் பெண்ணும் ஜூஸ் குடிப்பது போன்று, கை மட்டும் தெரியுமளவு ஒரு புகைப்படம் உள்ளது.
யார் அந்த நபர்?
இதை பார்த்த ரசிகர்கள் இந்த நபர் தான் சமந்தாவின் புதிய காதலரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமந்தா உடனான விவாகரத்திற்கு பிறகு, அவரது முன்னால் கணவர் நாகர்ஜுனா கடந்த ஆண்டு நடிகை சோபிதா தூலிபாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இயக்குநர் ராஜ் இயக்கத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிக்கல் பால் போட்டியை காண சென்ற இருவரும் கையை பிடித்துக் கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
இருவரும் காதலில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் யாராக இருந்தாலும் சந்தோசம் தான் என ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.