விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரபூர்வ இணையதளம் துவக்கம் - ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் தகவல்
விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார். அவர் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதிகாரபூர்வ இணையதளம்
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரபூர்வ இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் பக்கம் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘விஜய் குருதியகம்’ என்ற செயலியும் துவக்கி வைக்கப்பட்டதாக விஜய் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மகன் கையைப் பிடித்து ஷாலினி, அஜித் விமானத்தில் பறக்கும் வீடியோ - டுவிட்டரில் வைரல்