மகன் கையைப் பிடித்து ஷாலினி, அஜித் விமானத்தில் பறக்கும் வீடியோ - டுவிட்டரில் வைரல்
சுற்றுப்பயணம் செய்து வரும் அஜித்
நடிகர் அஜித்குமார், ஹெச்.வினோத்துடன் 3வது முறையாக இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்குமார், கிடைக்கும் நேரத்தில் பைக்கில் நீண்ட தூரம் சுற்றுவது வழக்கம்.
வலிமை படப்பிடிப்பு முடிந்ததும் நண்பர்களுடன் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுலா சென்று வந்தார் அஜித். தற்போது ஐரோப்பிய நாடுகளில், பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அஜித். விலை உயர்ந்த பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.
லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் அஜித்
இதையடுத்து, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார் அஜித். அங்குள்ள அட்டோமியம் என்ற சுற்றுலா தளம் முன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானது. லண்டன் சூப்பர் மார்க்கெட் கடையில் நடிகர் அஜித் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்கும் வீடியோ வைரலானது.
மனைவி ஷாலினி, மகனுடன் விமானத்தில் பறந்த அஜித்
இதற்கிடையில், புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி ஷாலினியும், அவரது மகனும் விமானத்தின் உள்ளே நடக்கின்றனர். இவர்கள் விமானத்தில் ஏறி எங்கோ செல்வது போல் தெரிகிறது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#AK sir with Family #Ajithkumar pic.twitter.com/qkw1qximLM
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) July 5, 2022
மணமேடையில் மணமகன் செய்த செயல்... வெட்கத்தில் தலைகுனிந்த மணமகள் - வைரலாகும் வீடியோ