பிரசாந்த் கிஷோர் நிலைமைதான் 2026ல் விஜய்க்கும் - அண்ணாமலை அட்டாக்!

Vijay K. Annamalai Prashant Kishor
By Sumathi Nov 15, 2025 02:23 PM GMT
Report

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமைதான் 2026ல் விஜய்க்கும் ஏற்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜய் நிலை

புதுச்சேரி பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை,

annamalai - vijay

கலந்தாய்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகாரில் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. பீகாரில் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்று யாத்திரை சென்ற பாதையில் இருந்த எல்லா தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.

மக்கள் அக்கட்சியை ஏற்கவில்லை. காங்கிரஸ் சிறிய கட்சியாக மாறிவிட்டது. ராகுல் காங்கிரஸ் பொறுப்புக்கு வந்த பிறகு 95 தேர்தல்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் ஆரோக்கியமான விஷயத்தை சொல்வதற்கு பதில் எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்கிறது.

நான் முதல்வர் வேட்பாளர் இல்ல.. இவருதான்..நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

நான் முதல்வர் வேட்பாளர் இல்ல.. இவருதான்..நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

அண்ணாமலை தாக்கு

விஜய்யும் காங்கிரஸ் போன்று எதிர்க்கின்ற மனப்பக்குவத்தில் உள்ளார். விஜய் எஸ்ஐஆரை எதிர்க்கிறார் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லட்டும். தமிழகம், புதுச்சேரியில் இருந்து குழுவை பீகாருக்கு அனுப்பி விஜய் பார்த்து வரலாம்.

பிரசாந்த் கிஷோர் நிலைமைதான் 2026ல் விஜய்க்கும் - அண்ணாமலை அட்டாக்! | Vijay Like 2026 Prashant Kishor S Failed Strategy

யாருடைய வாக்குரிமையையாவது அங்கு பறித்துள்ளோமா என்று தெரியவரும். தமிழக மற்றும் புதுச்சேரியில் மக்கள் மனதை வென்ற கட்சியாக, பலம் பொருந்திய கட்சியாக தேசிய ஜனநயாக கூட்டணி உள்ளது. பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக

த.வெ.க தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். கட்சி தொடங்கி விட்டோம் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை விஜய் எதிர்க்கிறார்.

தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மட்டுமே விஜய் செய்து வந்தால் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். பீகாரில் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி துவக்கி 200-க்கும் மேற்பட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து,

வெறும் 3.55% வாக்குகளை மற்றுமே பெற்றுள்ளார். விஜய் கட்சிக்கும் அந்த நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.