நான் மண்ணையா தின்னு வாழ முடியும்? கொதித்த அண்ணாமலை
நான் தொழில் பண்றதுல என்ன பிரச்சனை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன பிரச்சனை?
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “பீகாரில் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கிறதோ,

அதேபோல் தான் தமிழகத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்த அனைவருக்கும் நடக்கும். என் தொழிலை பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு நான் ஒன்று கேட்கிறேன். ரயிலில் வித் அவுட்டில் வந்தவர்களுக்கு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்தது எப்படி?
எந்தத் தொழிலும் செய்யக் கூடாது என கையைக் கட்டி உட்கார வச்சீங்கனா, நான் எப்படி சாப்பிடுவேன்? எப்படி காருக்கு டீசல் போடுவேன்? நான் மண்ணை தின்னு வாழ முடியுமா? என்னோட வாழ்க்கையை நான் வாழுறேன். நான் பிசினஸ் செய்றேன்.
அண்ணாமலை கேள்வி
யாரையாச்சும் அடிச்சு பிடுங்குறேனா?, மிரட்டுறேனா. என் தொழிலும், விவசாயமும், அரசியலும் எல்லாமே என் உழைப்பில்தான். இதில் என்ன தவறு இருக்கு? நான் எந்த தொழிலையும் செய்ய எனக்கு உரிமை உள்ளது.

நியாயமான வழியில் சம்பாதித்து அரசியல் செய்கிறேன். தனக்கும் சாராய ஆலைக்கும் தொடர்பு இல்லைனு கோர்ட்டில் சொன்னார் T.R.பாலு..! ஆனால் அவர் கோர்ட்டுக்கு வந்த கார் அந்த சாராய ஆலை நிறுவனத்தின் பெயரில் தான் இருக்கு.
தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் காரணமாக மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
அதிகாரிகள் எப்போதும் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்களும், நானும் பாதுகாப்பாக இருக்கமுடியும்” என தெரிவித்துள்ளார்.