நெருங்கும் மக்களவை தேர்தல் - பரபரப்பு ட்வீட் வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்..!

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthick Mar 25, 2024 01:01 PM GMT
Report

கட்சி துவங்கி வரும் சட்டமன்ற தேர்தலை தான் குறிவைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம்

சினிமா உட்சத்தில் இருக்கும் நேரத்தில், அரசியல் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார் நடிகர் விஜய். கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கட்சி துவங்கிய அவர், தற்போது கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கின்றார்.

[CGX4K6

அதே நேரத்தில் கட்சியில் தொண்டர்களை இணைக்கும் பணியில் அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என நிர்ணயித்து தமிழக வெற்றிக் கழகம் பயணித்து வருகின்றது.

2 நாட்களில் 50 லட்ச பேர் - 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

2 நாட்களில் 50 லட்ச பேர் - 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

பதிவு

அவ்வப்போது அரசியல் குறித்த பதிவுகளை வெளியிட்டு வரும் விஜய், CAA சட்டம் அமலானதை எதிர்த்து பதிவிட்டிருந்தார். மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் தற்போது அவர் மற்றுமொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

vijay-latest-tweet-in-election-time

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.