2 நாட்களில் 50 லட்ச பேர் - 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthick Mar 10, 2024 10:33 AM GMT
Report

தமிழக வெற்றிக்கழகத்தில் இது வரை 50 லட்ச உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கட்சியை கடந்த மாதம் 2-ஆம் தேதி துவங்கிய அவர், கட்சியின் நிர்வாகிகளையும் அண்மையில் அறிவித்தார்.

50-lakhs-people-joined-in-vijay-tvk-party

வரும் மே மாதத்தில் தென்தமிழகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி, கட்சியின் சின்னம் - கொடி போன்றவற்றை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளிவரும் நிலையில், அக்கூட்டம் திருநெல்வேலி அல்லது மதுரையில் நடைபெறக்கூடும் என்ற கூறப்படுகிறது.

50 லட்ச பேர்

அதே நேரத்தில், உறுப்பினராக கட்சியில் சுமார் 2 கோடி பேரை இணைத்திட வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியதை அடுத்து அதற்கான பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சி; கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு - பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சி; கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு - பரபரப்பு!

கடந்த 8-ஆம் தேதி கட்சிக்கான தனியாக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி கட்சியில் முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார். அதனை தொடர்ந்து பலரும் ஒரே நேரத்தில் செயலியை பயன்படுத்த முற்பட்டதால், செயலி சிறிது நேரம் முடங்கியது என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன.

50-lakhs-people-joined-in-vijay-tvk-party

இச்சூழலில் தான், உறுப்பினரா சேர்க்கும் பணி துவங்கி வெறும் 2 நாட்களாகிய நிலையில், தற்போது வரை 50 லட்ச உறுப்பினர்கள் கட்சியில் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50-lakhs-people-joined-in-vijay-tvk-party

இந்த செய்தியை வெற்றிக் கழகத்தின் துணை செயலர் அறிவித்துள்ளார். இதில், உறுப்பினர் சேர்க்கை செயலி மூலமாகதான் அதிகம்பேர் உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.