இதற்கெல்லாம் கட்சியின் பெயரை பயன்படுத்தவே கூடாது - அதிரடியாக உத்தரவிட்ட த.வெ.க தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தி கோட்
நடிகர் விஜய் தான் இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிப்பேன் என அறிவித்து விட்டார். அதில், ஒரு படமான "தி கோட்" வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளிவர உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுதரி என பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பயன்படுத்தக்கூடாது..
முன்னதாக படத்திற்கு இசை வெளியிட்டு விழா இருக்காது என்ற ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த சூழலில் தான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் வெளியீடு நெருங்கும் நிலையில், கட்சியின் பெயரை படத்தின் ப்ரோமோஷனுக்கு பயன்படுத்த கூடாது என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு கட்சி சார்பில் பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று விஜய் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.