விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியில் இடம்பிடித்த நடராஜன்

india cricket league
By Jon Feb 04, 2021 03:55 PM GMT
Report

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியில் டி.நடராஜன் மீண்டும் இடம் பிடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி மகுடம் சூடியது. அடுத்ததாக விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 18-ந் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து நேற்று அறிவித்தனர். முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆடாத இந்திய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த டி.நடராஜன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தமிழக அணி வருமாறு:- தினேஷ் கார்த்திக் (தலைவர்) பாபா அபராஜித் (துணை தலைவர்), பாபா இந்த்ரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், என்.ஜெகதீசன், சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, ஜெ.கவுசிக், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சோனு யாதவ், கே.விக்னேஷ், டி.நடராஜன், அஸ்வின் கிறிஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், ஜி.பெரியசாமி, எம்.முகமது.