திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி; இதே வீரியத்துடன் விஜய் இருக்கணும் - தமிழிசை செளந்தரராஜன்
விஜய் இதே வீரியத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது விஜய் பேசிய உரை தொண்டர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழிசை கருத்து
இந்நிலையில் தவெகவின் முதல் மாநில மாநாடு ற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் உரை குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தம்பி விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய கட்சி ஒன்று உருவாகியுள்ளது. உதயாவுக்கு எதிராக உருவாகியுள்ள அந்த கட்சிக்கு எனது வாழ்த்துகள். விஜய் இதே வீரியத்துடன் இருக்க வேண்டும். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருக்கிறது.
குற்றம் சொல்லும் அளவிற்கு எதுவுமே பாஜகவில் இல்லை என்பதை தம்பி விஜய்க்கு விளக்க நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.