பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் விஜய் - விமானநிலையத்தில் பரபரப்பு!

Vijay Hyderabad Varisu
By Sumathi Jan 23, 2023 10:19 AM GMT
Report

பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விஜய் 

நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான படம் வாரிசு. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக மந்தனா, மற்றும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா யோகி பாபு, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் விஜய் - விமானநிலையத்தில் பரபரப்பு! | Vijay Goes Through Security Check At Airport

7 நாட்களில் 210 கோடி வசூலையும் பெற்றதாக பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது.

வெற்றி கொண்டாட்டம் 

இதில் விஜய் உடன் இயக்குனர் வம்சி படத் தயாரிப்பாளர் தில் ராஜு இசையமைப்பாளர் தமன் மற்றும் பாடல் ஆசிரியரும் படத்தின் வசனகர்த்தாவும் ஆன விவேக் ஷாம் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து விஜய் ஐதராபாத் விமான நிலையம் திரும்பினார்.

அங்கு அவர் பாதுகாவலர் இல்லாமல் முக கவசம் அணிந்து மற்ற பயணிகளை போலவே பாதுகாப்பு சோதனை வரிசைக்கு நடந்து சென்று நின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.