திருமணம் ஆகாத பிரபல நடிகையுடன் நடிகர் விஜய் நெருக்கம்? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Vijay Tamil Cinema Marriage
By Thahir 2 வாரங்கள் முன்

நடிகர் விஜய் குறித்து தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மனைவியுடன் கருத்து வேறுபாடா?

நடிகர் விஜய்யின் திரைப்பட விழாக்கள் மற்றும் பிரபலங்களில் இல்ல நிகழ்ச்சிகளில் தனது கணவருடன் கலந்து கொண்டு வருவார் அவரது மனைவி சங்கீதா.

ஆனால் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அட்லீ - ப்ரியாவின் சீமந்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை.

vijay-closeness-with-unmarried-famous-actress

இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. சங்கீதா வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகள் மற்றும் மகன் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவிலலை என தகவல்கள் வெளியாகின.

மேலும் மற்றொரு தகவல்களும் வெளியானது அதில் நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

பிரபல நடிகையுடன் நெருக்கம் 

இது குறித்து விஜய் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது பொய்யான தகவல் என்ற விளக்கமும் அவர் தரப்பில் இருந்து கூறவில்லை.

vijay-closeness-with-unmarried-famous-actress

இதனால் பல சந்தேகங்கள் நிலவி வருகிறது. இதனிடையே நடிகர் விஜய் திருமணம் ஆகாத நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுப்படுகிறது.

அந்த நடிகை எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்வதாகவும், ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் நடிகர் விஜய்யிடம் கேட்டுவிட்டு தான் அந்த நடிகை சென்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.