Monday, Jun 2, 2025

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய கட்சி தொடங்கினார்- பெயர் என்ன தெரியுமா?

actor political fans
By Jon 4 years ago
Report

நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் புதிய கட்சி தொடங்குவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. விஜய் மக்கள் மன்றத்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளிவந்ததையடுத்து, அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், எனது படத்தையோ பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் தெரிவித்தார்.

மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ் . ஏ சந்திர சேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார்.

அப்பாவுக்கும் மகனுக்கும் பனிப்போர் நடந்துவரும் நிலையில் தற்போது இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு அமைப்பை தொடங்கி இருக்கிறார். அதன்பெயர் செக்யூர் அவர் சிட்டி (secure our city) என பெயர் வைத்திருக்கிறார். மக்களின் பாதுகாப்புக்காக இந்த முயற்சியை எடுப்பதாக எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.


Gallery