Saturday, Jul 5, 2025

கோமாவில் இருந்து எழுந்து வந்து பேசுவதை நிறுத்து - விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை..!

Vijay Madurai
By Thahir 3 years ago
Report

மதுரையில் ஆதினத்தை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஆதினம் பேச்சு

மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதினம் பேசுகையில்,

கோமாவில் இருந்து எழுந்து வந்து பேசுவதை நிறுத்து - விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை..! | Vijay Fans Warn Madurai Aadinath

அவமதிக்கும் நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்றும், நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார் எனவும் பேசினார்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்

இது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை ஆதினத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதாவது, மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாம தப்பா!!!

வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து!!! எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை!! தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை!!! என்றும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.