மு.க.ஸ்டாலின் சந்திப்பால் நடந்த மாற்றம் - மக்கள் இயக்கத்தை எச்சரித்த தளபதி விஜய்
தனது மக்கள் இயக்கத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மறைமுக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இயக்கம் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெளிப்படையாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. அதன்பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த மக்கள் இயக்கத்தை மீண்டும் உள்ளாட்சி தேர்தல் மூலம் விஜய் அரசியல் பக்கம் திருப்பியுள்ளார்.
Thalapathy @actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/zuw6SOq8qZ
— Bussy Anand (@BussyAnand) April 6, 2022
ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களில் முதல்முறையாக போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கம் அனைத்து கட்சிகளாலும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியது எனலாம். அதேசமயம் பண மதிப்பு நீக்கம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், பட வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என விஜய்யும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாமல் இருப்பது போல் ஆகிவிட்டது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில , இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நம் தளபதி இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன். விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கை விஜய் அறிவுரையில் வெளியிடப்பட்ட அறிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நேற்றைய தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் சந்தித்து இருந்தார். ஏற்கனவே ஆங்காங்கே 2021 ஆட்சியில் தளபதி(மு.க.ஸ்டாலின்)...2026 ஆட்சியில் நம் தளபதி(விஜய்) போன்ற வாசகங்களுடன் திமுக தலைமையை உசுப்பேற்றும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து இத்தகைய அறிக்கை வெளியிட்டு இருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.