விஜய் ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் - ஆனாலும் கூத்தாடிகள் பின்னால்..! வேல்முருகன் பரபரப்பு பேச்சு
தமிழக இளைஞர்கள் கூத்தாடி பின்னால் போகக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன்
முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ இராசேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசியது வருமாறு,
கூத்தாடிகளை...
அண்மையில் ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை.
உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் அவரது இணையதளம் முடங்கிவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஊடகத்தில் 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக செய்தி வருகின்றது.
விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும் ஆனாலும் கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும் என கட்டமாக பேசினார்.
அண்மையில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இதுவரையில் 50 லட்ச உறுப்பினரகள் சேர்ந்துள்ளதாக அதிகாரபூர்வமாகவே கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.