ஆன்லைன் மூலம் ரசிகர் மன்றத்தினரை சந்திக்கும் விஜய் : காரணம் என்ன?

Vijay
By Irumporai Jul 06, 2022 07:06 AM GMT
Report

சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம்  ரசிகர் மன்றத்தினரை சந்திக்கும் விஜய் : காரணம் என்ன? | Vijay Executives Meeting Online

மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்று உள்ளார். அவர் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது எப்படி நாமம் வரும் : சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் போஸ்டர்