அது எப்படி நாமம் வரும் : சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் போஸ்டர்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஆதித்த கரிகாலனாக விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட முதல் போஸ்டரில் விக்ரமின் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. அதன்படி அவர் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளதாக குறிப்பிட்டு அவரின் தோற்றமும் அந்த போஸ்டரில் இடம்பெற்று இருந்தது.
சர்ச்சையில் ஆதித்தகரிகாலன்
அந்த தோற்றம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விக்ரம் நெற்றியில் நாமமிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் “சோழர்கள் சுத்த சைவர்கள், அதுமட்டுமின்றி சிவ பக்தர்கள், அவர்கள் எப்படி நாமமிட்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் இது நாமம் இல்லை வெற்றித்திலகம் எனவும் ஒரு தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.
‘’சாகசக்கார வந்தியத்தேவன் இதோ ‘’ பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்