இவரோட பயோபிக்கில் நடிக்கதான் ஆசை - விஜய் தேவரகொண்டா ஆர்வம்!
விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விரும்புவதாக விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது படங்களுக்கு இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 25 ம் தேதி திரையரங்கிளில் வெளியான இப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது.
ஆசிய கோப்பை
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா துபாயில் நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார். அங்கு போட்டி நடைபெறும் இடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா இப்போது நடைபெறும் இந்த போட்டியில் விராட்கோலி குறைந்தது 50 ரன்களையாவது எடுப்பார் என்று நம்புகிறேன். பின் விஜய் தேவரகொண்டாவிடம்,
விராட் கோலி - பயோபிக்
உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஏற்கெனவே எம். எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை சுஷாந்த் சிங் நடித்துவிட்டார்.
அதனால் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்கம்! ஆதாரம் கோரும் முன்னாள் போராளி IBC Tamil
