ராஷ்மிகாவுடன் காதலா? எனக்கு ஓகேதான் - விஜய் தேவரகொண்டா பளீச் பதில்

Vijay Deverakonda Rashmika Mandanna Gossip Today
By Sumathi Aug 18, 2022 06:30 AM GMT
Report

ராஷ்மிகாவுடன் காதல் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பளீச்சென்று பதிலளித்துள்ளார்.

காதல் கிசுகிசு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ராஷ்மிகாவுடன் காதலா? எனக்கு ஓகேதான் - விஜய் தேவரகொண்டா பளீச் பதில் | Vijay Devarakonda About Love With Rashmika

இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது . ராஷ்மிகாவும், விஜய்யும் காதலிப்பதாக முன்பு பரபரப்பாக பேசப்பட்டு காலப்போக்கில் அந்த பேச்சு அடங்கியது.

ராஷ்மிகாவுடன் காதலா?

கடந்த சில நாட்களாக ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா தொடர்பான செய்திகள் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. விரைவில் இருவரும் தங்கள் திருமண தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ராஷ்மிகாவுடன் காதலா? எனக்கு ஓகேதான் - விஜய் தேவரகொண்டா பளீச் பதில் | Vijay Devarakonda About Love With Rashmika

ஆனால் இது குறித்து இருவருமே மெளனம் சாதித்து வருகின்றனர். தற்போது, அனன்யா பாண்டேவுடன் இவர் நடித்துள்ள லைகர் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.

விஜய் தேவரகொண்டா பதில்

இந்த பிரமோஷன்களின்போது ராஷ்மிகாவுடன் காதல் என கூறப்படுவது குறித்து மனம் திறந்துள்ளார். ராஷ்மிகாவுடன் காதல் என கிசுகிசுக்கப்படுவது தனக்கு ஓகேதான். ஒரு பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை அறிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் காட்டும் ஆர்வமே இத்தகைய கிசுகிசுக்களை உருவாக காரணம். தன்னைப் பற்றி எந்த செய்தியும் வராமல் இருப்பதற்கு பதிலாக இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவது தனக்கு ஓகே,

இதன்மூலம் தன்னை பற்றி தொடர்ந்து ஆர்ட்டிகிள்கள் வரும் என்றும், ஆனால் தான் இதுகுறித்தெல்லாம் கவலை கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.