சீக்கிரமே லவ் மேரேஜ் பண்ணுவேன்; பெண் யார் தெரியுமா? பரபரப்பை கிளப்பிய விஜய்!
விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா.
இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது, சினிமா விருது போன்ற பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். அண்மையில், நடிகை சமந்தாவோடு இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பின், இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
திருமணம்
ஆனால் இது குறித்து இருவருமே மெளனம் சாதித்து வருகின்றனர். தற்போது, மிருணால் தாகூருடன் இவர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் வேலைகளில் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, நிச்சயமாக தனது காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.