நான் சிங்கிளா? நடிகையுடன் டேட்டிங் செய்துள்ளேன் - மனம் திறந்த விஜய் தேவரகொண்டா
நடிகையுடன் டேட்டிங் செய்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா
அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது சஹிபா என்கிற இந்தி ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், தன்னுடைய காதல், டேட்டிங் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகையுடன் டேட்டிங்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என்னுடன் நடித்த சக நகையை நான் டேட் செய்துள்ளேன்" என கூறினார்.

மேலும், "காதலிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அது நிபந்தனையற்றதா என்று தெரியவில்லை. ஏனென்றால் என் காதல் எதிர்பார்ப்புகளுடன் கலந்தது. காதலில் நிபந்தனைகள் இருப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்" என பேசினார்.
கீத கோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்த போது இருந்தே விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட் செய்த்து வருகின்றனர் என தகவல் பரவியது. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்தனர். மேலும் ராஷ்மிகா அடிக்கடி விஜய் தேவரகொண்டா வீட்டிலிருந்து படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan