3 மாதத்திற்குள் விஜய் தேவரகொண்டா காதல் கல்யாணம் - சமந்தா பரபர தகவல்!

Samantha Vijay Deverakonda
By Sumathi Aug 25, 2023 02:30 PM GMT
Report

நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து நடிகை சமந்தா தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 மாதத்திற்குள் விஜய் தேவரகொண்டா காதல் கல்யாணம் - சமந்தா பரபர தகவல்! | Samantha Shares Truth About Vijaydevarakonda

அதன்படி, இந்தப் படத்திற்காக சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சமந்தா, “விஜய் தேவரகொண்டாவைப் பார்க்கும் பலரும் அவர் ஒரு ரெளடி, ரக்ட் பாய் என நினைப்பார்கள்.

திருமணம்?

ஆனால், உண்மையில் அவர் மிகவும் ஒழுக்கமானவர். நேரத்திற்கு தூங்கி எழுந்திருப்பார். நம்ப மாட்டீர்கள், அவருக்கு ஒரு கெட்டப் பழக்கம் கூட கிடையாது. காதல் கதைகள் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். எனக்கு இது போன்ற கதைகள் போர் அடித்து விட்டது.

3 மாதத்திற்குள் விஜய் தேவரகொண்டா காதல் கல்யாணம் - சமந்தா பரபர தகவல்! | Samantha Shares Truth About Vijaydevarakonda

‘குஷி’ படத்தில் காதல் நன்றாக வரக் காரணம் விஜய் தேவரகொண்டாவும் தான். இந்தப் படத்திற்குப் பிறகு திருமணம் குறித்து அவரது கருத்து மாறி இருக்கிறது. இந்த வருட இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்வார்.

ஒவ்வொரு வருடமும் அடுத்த இரண்டு, மூன்று வருடத்தில் எனச் சொல்வார். ஆனால், இந்த வருட இறுதியில் அவரது கேர்ள் ஃபிரண்டை திருமணம் செய்து கொள்வார்” எனத் தெரிவித்துள்ளார்.