35 வயசாச்சு; இன்னும் சிங்கிளா இருப்பேனா? நடிகையுடன் காதலை உறுதிசெய்த விஜய்!
விஜய் தேவரகொண்டா காதல் குறித்து பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
விஜய் தேவரகொண்டா
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.
இவர் யாரை காதலிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் இருந்து வருகிறது. எனவே, திருமண வதந்திகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது.
காதல் உறுதி
தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அதன் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில், காதலிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். காதலிக்கவும் தெரியும். அது நிபந்தனையற்றதா என்று தெரியவில்லை.
ஏனென்றால் என் காதல் எதிர்பார்ப்புகளுடன் கலந்தது. காதலில் நிபந்தனைகள் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். எனக்கு 35 வயதாகிறது. நான் சிங்கிளாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் காதலிக்கிறேன்.
ஒரு சக நடிகருடன் டேட்டிங் செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒன்றாக நடித்ததிலிருந்து டேட்டிங் செய்வதாக செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan
