Thursday, May 1, 2025

ஐய்யோ...டான்ஸ் ஆட போனேன்..ஆனா விஜய்க்கு கிஸ் கொடுக்க வெச்சாங்க!! சீரியல் நடிகை பகீர்

Vijay
By Karthick a year ago
Report

நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனுபவத்தை மாஸ்டர் சாந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாஸ்டர் சாந்தி

பெரும்பாலும் பின்னணியில் நடனமாடும் நடிகைகளை நாம் கவனத்தில் கொள்வதில்லை. அப்படி இருப்பவர்களில் சிலரே மக்களிடம் ஒரு வித அனுபவத்தை பெறுவார்கள். அப்படி, நடன கலைஞரான மாஸ்டர் சாந்தி, சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக நீடிக்கிறார்.

vijay dance kiss serial actress interview

படங்களில் பின்னணி நடன கலைஞராக இருந்தவர், மெட்டி ஒலி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அத்தொடருக்கு பிறகு மெட்டி ஒலி சாந்தி என்றே அழைக்கப்பட்டவர் கண்ணான கண்ணே, முத்தழகு குல தெய்வம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

அதே போல, பிக் பாஸ் சீசன் 6'இல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் மாஸ்டர் சாந்தி. இவர் நடிகர் விஜயின் லியோ படத்திலும் நடித்துள்ளார். அண்மை பேட்டி ஒன்றில் பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

vijay dance kiss serial actress interview

பத்ரி படத்தில் கிங் ஆஃப் சென்னை என்ற பாடலில் நடனமாடியது ஜாலியாக இருந்தது. பிரபு தேவா மாஸ்டராவது டப்புன்னு எதாவது சொல்லி ஆடவைப்பார். ஆனால் ராஜு மாஸ்டர் அப்படி சொல்ல மாட்டார். பெண்களிடம் அதிகமாக பேசவேமாட்டார்.

விஜய்க்கு முத்தம்

உயரமா யாராது பெண் இருந்தால் பக்கத்தில் கூட வரமாட்டார், அங்க போய் நில்லுன்னு சொல்லிவிடுவார்.அந்த பாடலில் எனக்கு நிறைய சோலோ கொடுத்து ஆட வைத்தார்.

அந்த பாட்டு' ல நடந்த விஷயம் - விவாகரத்துக்கு சம்மந்தம் இருக்கு!! சமந்தா ஓபன் டாக்

அந்த பாட்டு' ல நடந்த விஷயம் - விவாகரத்துக்கு சம்மந்தம் இருக்கு!! சமந்தா ஓபன் டாக்

அப்படி ஒரு ஷாட்டில் விஜய் சாருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்பேன். ஐய்யோ, அப்பவே நமக்கு அவர் கிரஷ் என்பதால், முத்தம் கொடுக்க சொன்னதும்,

vijay dance kiss serial actress interview

நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். உடனே ராஜூ மாஸ்டர், பாத்து விஜய், டக்குன்னு திரும்பி போறீங்க, உதட்டில் கொடுத்துவிடுவேன்னு கலாய்த்துவிட்டார், அப்போது தான் அதிகமாக விஜய் சிரித்து பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.