அந்த பாட்டு' ல நடந்த விஷயம் - விவாகரத்துக்கு சம்மந்தம் இருக்கு!! சமந்தா ஓபன் டாக்
நடிகை சமந்தா தற்போது பங்காரம் என்ற படத்தில் நடிக்க கம்மிட்டாகியுள்ளார்.
சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை சமந்தா, சில காலமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியாமல் இருக்கின்றார்.

தமிழ், தெலுங்கு என அநேக முன்னணி நாயகர்களுடன் நடித்த சமந்தா, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். ஓ மை பேபி, சாகுந்தலம், யசோதா போன்ற படங்களில் கதையின் நாயகியாக சமந்தா நடித்தாலும், நடுவில் விஜய் தேவரைக்கொண்டாவுடன் "குஷி" படத்திலும் நடித்தார்.
தற்போது அவரின் நடிப்பில் பங்காரம் என்ற படம் துவங்கவுள்ளது. சமந்தாவின் பிறந்தநாளில் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன.

அதே போல, ஹிந்தியில் citadel வெப் தொடர் வெளியீட்டையும் சமந்தா எதிர்பார்த்துள்ளார். முன்னதாக அவரின் விவாகரத்தின் போது, பல விதமான கேள்விகள் எழுந்தன.
வேண்டாம்'னு சொன்னாங்க
தெலுங்கு திரையுலகில் மிக பெரிய ஆதிக்கம் செலுத்தும் குடும்பத்தின் வாரிசான நாகா சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களை பிரிந்த பிறகு, புஷ்பா படத்தில் ஓ அண்டாவா பாடலில் மிகவும் கவர்ச்சியாக நடமாடி, ரசிகர்களை சிலிர்க்கவைத்தார் சமந்தா.

அப்படத்தில் தான் எதனால் நடித்தேன் என்பதை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் சமந்தா. அது குறித்து அவர் அளித்த பேட்டியில், எனக்கு ஓ அண்டாவா பாடல் வாய்ப்பு வந்தபோது, நான் விவகாரத்தின் நடுவில் இருந்தேன்.

இந்த அறிவிப்பு வந்தது, எனது ஒவ்வொரு நன்பர்களும், எனது குடும்பத்தினரும், 'வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள், பிரிந்து செல்வதாக அறிவித்த பிறகு, இப்போது ஐட்டம் பாடல் செய்ய வேண்டாம் என்றார்கள் எனக்கூறினார்.
இந்திய அமைதி படையினரின் வெறியாட்டம் - யாழ். வைத்தியசாலையில் பலியான 68 அப்பாவிகளுக்கு நினைவேந்தல் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil