தவெக தலைவர் விஜய்...தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய 2 பேருக்கு மட்டும் வாழ்த்து!

Vijay Pawan Kalyan Andhra Pradesh Thamizhaga Vetri Kazhagam
By Swetha Jun 05, 2024 03:52 AM GMT
Report

ஆந்திராவில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

தலைவர் விஜய் 

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக மட்டும் அதன் கூட்டணி காட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தவெக தலைவர் விஜய்...தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய 2 பேருக்கு மட்டும் வாழ்த்து! | Vijay Congratulates Chandrababu Naidu Pawan Kalyan

இந்த சூழலில், ஆந்திரா தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று 16 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதன்மூலம் பெரும்பான்மையான இடங்களை பிடித்து தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆகிறார்.

எதிர்க்கட்சியினர் பிளேடு எடுத்துட்டு வராங்க - பாதுகாப்பில்லை - அதிர்ச்சி கொடுத்த பவன் கல்யாண்

எதிர்க்கட்சியினர் பிளேடு எடுத்துட்டு வராங்க - பாதுகாப்பில்லை - அதிர்ச்சி கொடுத்த பவன் கல்யாண்

தேர்தலில் வெற்றி

இந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ஆந்திர பிரதேசத்தை தலைமையேற்று நடத்த சட்டமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்த்துகள்.

தவெக தலைவர் விஜய்...தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய 2 பேருக்கு மட்டும் வாழ்த்து! | Vijay Congratulates Chandrababu Naidu Pawan Kalyan

தொலைநோக்கு பார்வை கொண்ட உங்கள் தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிக இடங்களை வென்று ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்த பதிவில், "சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று, 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கு சேவை செய்யும் உங்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.