விஜய் முதலமைச்சரானால் ஈபிஎஸ்க்கு விளையாட்டுத்துறை - புகழேந்தி

Vijay Tamil nadu Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Oct 12, 2025 06:34 AM GMT
Report

விஜய் முதலமைச்சரானால் ஈபிஎஸ்க்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என புகழேந்தி விமர்சித்துள்ளார்.

விஜய் கூட்டணி

ஓசூரில் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணா உருவம் பதித்த அதிமுக கொடி கொடியாக தெரியவில்லை. விஜயின் தமிழக வெற்றிக் கழக கொடியை காட்டி அது பறக்கிறது என கூறும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொடி என்னவாயிற்று ?

vijay - edappadi palanisamy

கூட்டணியில் உள்ள பிஜேபி இதை ஒப்புக்கொள்கிறதா? பிஜேபி தங்களின் எதிரி என விஜய் பிரச்சாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசுவதோடு இல்லாமல் பிஜேபி உடன் தான் போட்டியே என கூறி வருகிறார். இந்த சூழலில் தான் கரூர் சம்பவம் நடைபெற்றது.

தனது கூட்டணியில் பிஜேபியை வைத்துக் கொண்டே விஜயின் கட்சி கொடியை வானோங்கி பறக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். சொந்தக்கொடி போய்விட்டது என்பதை உணராமல், ஊரில் உள்ள கொடிகளை எல்லாம் சொந்தக் கட்சிக்காரனை விட்டு அதை பிடிக்க சொல்லும் அவமான நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

விஜய்யுடன் கூட்டணி; பாஜகவை கழட்டிவிடப்போறார் இபிஎஸ் - டிடிவி ஒரே போடு..

விஜய்யுடன் கூட்டணி; பாஜகவை கழட்டிவிடப்போறார் இபிஎஸ் - டிடிவி ஒரே போடு..

புகழேந்தி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் விஜயின் வீட்டு கதவு முன்பு விழுந்து வணங்கி, 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வருவது போல கூட்டணிக்கு இவர்கள் விஜயை அழைத்தால் ஒருவேளை அவர் சம்மதிக்கலாம். அவ்வாறு விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அவர் முதலமைச்சரானால் பழனிசாமிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகமே என்பதால் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஓசூரில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

pugazhenthi

அண்ணா திமுகவை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு பிறவியாக எடப்பாடி பழனிசாமியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு பல்வேறு கட்சியினர் நிவாரண தொகை வழங்கிய நிலையில் அதிமுக வழங்கவில்லை.

எங்கேயோ அமர்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சியின் தலைவர் 2 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்துள்ளார். இந்த நாட்டினுடைய பிரதமர் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா பாரதிய ஜனதா கட்சி சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், உட்பட அரசியல் கட்சியினர் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகைகள் நேரில் சென்று வழங்கினார்கள்.

அதேபோல தனது சொந்த கட்சி தொண்டர்கள் உயிரிழந்தார்கள் என்பதற்காக தல 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதனை நான் மனதார பாராட்டுகிறேன். ஆனால், ஒரு நிவாரணமும் வழங்காத ஒரே ஒரு அயோக்கியன், திருடன், மொள்ளமாரி, நாட்டை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டு, தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு அம்மா உட்பட என்னைப் போன்ற தொண்டர்களின் பணத்தை வைத்துக்கொண்டு, நிவாரணம் வழங்காத ஒரே ஆள் பழனிச்சாமி.

பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை விட கேவலமான அரசியல் என்பது இருக்காது. அதிமுக சார்பில் பழனிச்சாமி இதுவரை 10 பைசா கூட நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் சகாக்கள் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள்.

அவ்வளவு பணம் வைத்துக்கொண்டு மனம் இல்லாத அயோக்கியர்கள் அவர்கள். பழனிச்சாமிக்கு நிவாரணம் வழங்க மனம் வராது. கொள்ளையடிக்கத்தான் தெரியும். புரட்சித்தலைவர் மற்றும் அம்மாவைப் போல அவர் என்றைக்கும் அட்சய பாத்திரமாக மாற மாட்டார்” என விமர்சித்துள்ளார்.