தத்தளிக்கும் தவெக; விஜய்யின் இறுதி முடிவு - விடாப்பிடியாய் நிற்கும் சிபிஐ
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது.
கரூர் சம்பவம்
விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்கள். சுமார் ஏழு மணிநேரம் 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது.

அதில் விஜய் சொன்ன தகவல்களுக்கும், கட்சி தலைமை நிர்வாகிகள் சொன்ன தகவல்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரைச் சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கையை சமர்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சிபிஐ விசாரணை
தமிழ்நாடு முழுவதும்234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்துவதிலும் தவெகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. செங்கோட்டையன் பிற கட்சிகளிடம் இருந்து நிறைய பேரை தவெகவில் இணைய வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தினகரனும் இப்போது ஏழு தொகுதிகள் பங்கீட்டு அடிப்படையில் பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இந்த விசாரணை தேர்தலுக்கு முன்பே முடிந்து விடும்.
இதில் எந்நேரமும் விஜய் கைது செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கிறது. எனவே தேர்தலுக்குப் பிறகு கட்சி குறித்து நான் முக்கிய முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது என விஜய் முடிவு எடுத்துள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.