பாமக பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது - அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ்

Anbumani Ramadoss Dr. S. Ramadoss PMK
By Sumathi Jan 19, 2026 05:26 AM GMT
Report

பாமக பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 நிர்வாக குழு கூட்டம் 

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

ramadoss - anbumani

இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

"என்னுடைய தலைமையில் நிர்வாக குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து நிர்வாக குழு அலசி ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்துள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்ற தீர்ப்பின் படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லக்கூடாது.

ராமதாஸ் முடிவு

பாமகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாமகவின் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாமகவின் தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறுவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று நேரில் ஆஜர்

சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று நேரில் ஆஜர்

டெல்லி நீதிமன்றம் தீர்ப்பின்படி பாமகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவற்றை அன்புமணி உபயோகப்படுத்தக் கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாமகவின் தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடகங்கள் அப்படியே போடுகிறீர்கள்.

அது எனக்கு வருத்தமாக உள்ளது. இனியாவது அப்படி செய்ய வேண்டாம் என்று உங்களை பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று இந்த நிர்வாக குழுவில் கேட்டுக் கொண்டார்கள்.

ஏனென்றால் எனக்கு அந்த அதிகாரத்தை சேலத்தில் நடந்த பொதுக்குழு கொடுத்திருக்கிறது. கூட்டணி பற்றியும் விரிவாக இந்த நிர்வாக குழுவில் பேசினோம். சீக்கிரமே ஒரு நல்ல முடிவை உங்களுக்கு அறிவிப்போம். பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்” என தெரிவித்துள்ளார்.