சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று நேரில் ஆஜர்
சிபிஐ-யின் இரண்டாவது கட்ட விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று நேரில் ஆஜராகிறார்.
கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கடடமாக தவெக நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தவெக-வின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது, அடுத்ததாக தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த 12ம் திகதி டெல்லியில் விசாரணை நடந்தது, ஆறு மணிநேரமாக விசாரணை நடந்த நிலையில் இன்றும் நேரில் ஆஜராகவுள்ளார்.
இன்று விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின்படி, விஜய்யிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
