மோடி, பெரியார் பிறந்தநாள் - விஜய் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

Vijay Periyar E. V. Ramasamy Narendra Modi Birthday
By Karthikraja Sep 17, 2024 08:30 AM GMT
Report

பிரதமர் மோடிக்கும், பெரியாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

மோடி பெரியார் பிறந்த நாள்

இன்று(15.09.2024) தந்தை பெரியார் என மக்களால் அழைக்கப்படும் சமூக சீர்திருத்தவாதியான ஈ.வெ.ராமசாமியின் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.  

periyar modi birthday

மேலும் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

திராவிட பாதையில் செல்லும் தவெக? விஜய்யின் ட்வீட்டை பார்த்தீங்களா?

திராவிட பாதையில் செல்லும் தவெக? விஜய்யின் ட்வீட்டை பார்த்தீங்களா?

விஜய் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை தவிர மற்ற முக்கிய கட்சி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதே போல் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், "பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன்" என தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

இதன் பின் பெரியாரை நினைவு கூர்ந்து, “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; 

மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூகவலைத்தளத்தில் சர்ச்சை

9 மணிக்கு மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு பெரியார் தொடர்பான பதிவை 10 மணிக்கு பதிவிட்டுள்ளார். மோடிக்கு தான் முதல் வாழ்த்தா, பெரியார் இரண்டாம் பட்சமா என பெரியார் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். 

மோடிக்கு 2 வரியில் வாழ்த்து கூறி விட்டு பெரியாருக்கு இவ்வளவு பெரிய பதிவா என்று பாஜக ஆதரவாளர்களும் மற்றோரு பக்கம் விமர்சனம் செய்து வருகின்றனர்.