புதுசா பேசனும்னா.. செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டி தரமுடியுமா? விஜய், ஸ்டாலினுக்கு அட்டாக்!

Vijay M K Stalin BJP Karur
By Sumathi Sep 27, 2025 02:13 PM GMT
Report

விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார்.

திமுகவுக்கு ஓட்டு 

நடிகர் விஜய் இன்று நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து பேசிய விஜய், புதுசா சொல்லுங்க, புதுசா சொல்லுங்கனு சொல்றாங்க, செவ்வாய் கிரகத்துல ஐடி கம்பெனி கட்டப்படும்,

புதுசா பேசனும்னா.. செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டி தரமுடியுமா? விஜய், ஸ்டாலினுக்கு அட்டாக்! | Vijay Attack On Cm Mk Stalin False Statement

காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரேபிளைன் ஓட்டப்படும், இந்த மாதிரி அடிச்சு விடுவோமா... நம்ம முதல்வர் அடிச்சு விடுவாறே அந்த மாதிரி அடிச்சு விடுவோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் விஜய்.

விஜய் அட்டாக்

வருகிற தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டா அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி. மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா என விஜய் கேள்வி எழுப்பியதும், வேண்டாம் என அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பினர்.

vijay

நாமக்கல்லில் உரை நிகழ்த்திய நடிகர் விஜய்க்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக நாகப்பட்டிணத்தில் அவர் உரையாற்றிய போது அவருக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு அவர் ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என வாழ்த்தி அவருக்கு நாமக்கலை சேர்ந்த தவெக தொண்டர்கள் செங்கோலை பரிசாக வழங்கி உள்ளனர். அந்த செங்கோலை கையில் ஏந்தி, வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.