புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ரூ.1000 கிடைக்குமா? முக்கிய தகவல்
உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
உதயநிதி தகவல்
“நான் வாரத்தில் நான்கு, ஐந்து நாள்கள் வெளி மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருப்பேன். அப்போது பல இடங்களில் கூட்டமாக பெண்கள் நிற்பார்கள். அவர்களை சந்திப்பதாக வாகனத்தை நிறுத்துவேன். அப்போது சிலர் மனுக்களை கொடுப்பார்கள்.
சிலர், தம்பி அப்பாக்கிட்ட சொல்லிடுங்க ரூ. 1000 வந்துடுச்சு என சொல்லி நன்றி சொல்ல சொல்வார்கள். சிலர், அவருக்கு வந்துவிட்டது எனக்கு வரவில்லை. என்ன காரணம் என சொல்ல மாட்டுகிறார்கள் என்பார்கள்.
தற்போது தலைவர் அதில் இருக்கும் சில விதிகளை தளர்த்திவிட்டார். நிச்சயமாக சொல்கிறேன், இன்னும் இரண்டு மாதங்களில் தகுதிவாய்ந்த இன்னும் கூடுதலான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தலைவர் கொடுப்பார்.” என தெரிவித்துள்ளார்.