கேரவனில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது - விஜய்யை மோசமாக சாடிய பிரபலம்!
கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு, குழந்தைகளின் பசியையாற்றும் காலை, மதிய உணவுத்திட்டங்கள் தெரியாது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
விஜய் அரசியல்
நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால், விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கிள் என்றெல்லாம் பேசுவது கைதட்டலுக்கு மட்டுமே உதவும், வாக்காக மாறாது. 2026 தேர்தல் விஜய்க்கு அரசியல் என்றால் என்னவென்று புரிய வைக்கும். விஜய் சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது சரியாக இருக்காது. சினிமா வசனம் அரசியலுக்கு உதவாது.
எஸ்.வி.சேகர் சாடல்
கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு, குழந்தைகளின் பசியையாற்றும் காலை, மதிய உணவுத்திட்டங்கள் தெரியாது. முதலில் விஜய் கார் வரியை கட்டட்டும், பின் குடும்ப ஊழல் பற்றி பேசட்டும், சினிமாவில் இருப்பவர்களெல்லாம் ஊழல் பற்றி பேசக்கூடாது.
இனி என் அருமை நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னால் நிற்பேன். திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன். திமுகவை விமர்சிக்கிறாரே தவிர, தான் என்ன செய்யப்போகிறேன் என விஜய் சொல்வதே இல்லை.
அதை முதலில் சொல்ல வேண்டும். சினிமாவில் விஜய் பெரிய நடிகர்தான், ஆனால் அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லை. சினிமாவில் இருப்பவர்களெல்லாம், ஊழல் பற்றி பேசக்கூடாது” என தெரிவித்துள்ளார்.