திமுகவில் இணைந்து சில நாட்கள்தான் - மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு!
திமுகவில் மருது அழகுராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மருது அழகுராஜு
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ்.
இவர் திமுகவில் இணைந்த உடனேயே தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊடக விவாதங்களில் கட்சியின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த, ஏற்கனவே உள்ள பேச்சாளர்களுடன் கூடுதலாக ஆறு பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் பொறுப்பு
அதன்படி ப. தாயகம் கவி, மருது அழகுராஜ், பழ. செல்வகுமார், திருப்பத்தூர் ரஜினி, சைதை சாதிக், வழக்கறிஞர் துரை தமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுகவின் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், இணைந்து பங்கு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இவர், தி.மு.க. சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார். முன்னதாக அண்மையில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோவைக் கார்த்திக்கு தீர்மானக் குழுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,