குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்- கொந்தளித்த விஜய் ஆண்டனி!
தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு,எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
அண்மையில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியானது. கணவனை வெறுக்கும் மனைவி, மனைவியின் அன்பைப் பெறப் போராடும் கணவன் என்ற கதைக்களத்தை கொண்டு இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை விமர்சித்து திரைப்பட விமர்சகர் ப்ளுசட்டை மாறன், தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்தார். வழக்கம்போல இந்த கதையில் எதுவும் இல்லை என்று ப்ளுசட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
விஜய் ஆண்டனி
இதனை கண்டித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து சொல்லும் ப்ளுசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல படங்களை கொண்டாடாமல்,
தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனத ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவை அன்போ சிவம் படம் மாதிரி ஆக்கிடாதீங்க..' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் கமல், மாதவன், கிரண், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான அன்பே சிவம் திரைப்படத்திற்கு அப்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. காலங்கள் கடந்து தற்போது அனைவரும் கொண்டாடுகின்றனர். இதுமாதிரியான நிலைமை ரோமியோ போன்ற நல்ல படத்திற்கு கொடுத்து விடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கேட்டுகொண்டார்.