மேடையில் விஜய் ஆண்டனியால் கண்ணீர் விட்டு அழுத விஜே மணிமேகலை

Vijay Antony Manimegalai
By Karthick Mar 10, 2024 03:14 AM GMT
Report

 நடிகர் விஜய் ஆண்டனியால் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜே மணிமேகலை கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மணிமேகலை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி தனியாக கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

manimegalai-emotional-over-vijay-antony

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை, அண்மையில் காலில் அடிபட்டு சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக தனது பயணத்தை மேற்கொண்டு வரும் அவர், நடிகர் - இசையமைப்பாளர் - பாடகர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்தார்.

நாங்க காசு இல்லாம தான் இங்க வரோமா.. ஓவரா பேசாதீங்க - கடுப்பான விஜே மணிமேகலை!

நாங்க காசு இல்லாம தான் இங்க வரோமா.. ஓவரா பேசாதீங்க - கடுப்பான விஜே மணிமேகலை!

அப்பேட்டியில் மணிமேகலை, சில மாதத்திற்கு முன்பு காலில் சிறிய அடிபட்டபோது, நடக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்றும் அதனால் தான் பட்ட வேதனையை சொல்லவே முடியாது என்று குறிப்பிட்டு, அந்த நேரத்தில் தனக்கு ஆறுதலாக இருந்தது உங்களுடைய வீடியோ தான் என்றார்.

காரணமும் நீங்கள் 

உங்களை பார்த்து நான் வியந்துவிட்டேன், இப்போது நான் இங்கு இருப்பதற்கு காரணமும் நீங்கள் தான் சார் என அழ துவங்கினார். உடனே விஜய் ஆண்டனி, மணிமேகலையின் கைகை பிடித்து, வாழ்க்கை பயணம் என்பது கொசுவிட ரொம்ப சின்னதானதுஎன்றும் ஒரு சின்ன புள்ளிதான் நம்மோட வாழ்க்கை என்றார்.

manimegalai-emotional-over-vijay-antony

நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகமே என்று பார்க்காமல் இந்த உலகில் உலகமே சிறு பகுதி தான் நம் வாழ்க்கை என்று நினைத்தாலே உங்களுடைய பிரச்சனை ரொம்ப சிறியதாக மாறிவிடும். உங்களைவிட உங்களது கவலைகள், பிரச்சனைகள் எல்லாம்ரொம்ப சின்னது என்று மணிமேகலைக்கு ஆறுதல் கூறினார்.